ETV Bharat / state

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு: மாஜிஸ்திரேட் மீதான மனுவை விசாரிக்க மறுப்பு - jeyaraj fennix murder case

மதுரை: ஜெயராஜ், பென்னிக்ஸ், கொலை வழக்கில் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான மனுவை பொதுநல வழக்காக விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

madurai
madurai
author img

By

Published : Sep 15, 2020, 8:57 AM IST

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ராஜிவ்காந்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கைது செய்யப்பட்டு சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர். அப்போது அவர்களை நேரில் சந்தித்து உரிய விசாரணை நடத்தாமல், நீதிமன்ற காவலுக்கு மாஜிஸ்திரேட்டு அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

ஆகவே, அவர்களை நேரில் சந்திக்காமல் சிறைக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட்டு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பினோம். இதுவரை எந்தப் பதிலும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதை முடிவு செய்ய, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு பட்டியலிடப்பட்டது. இதை பரிசீலித்த நீதிபதிகள், இவ்வழக்கை பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு: தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்திலிருந்து 173 கேள்விகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.