மதுரை : கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கை தமிழர் மற்றும் சிங்களர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து காவல் துறையால் கைது செய்யப்பட்டவர் காசி விஸ்வநாதன் (30).இவர் மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் காந்தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இவர்,கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக 22 இலங்கைத் தமிழர்கள், இரண்டு சிங்களர்கள் அழைத்து வந்து மதுரை கப்பலூர் கூத்தியார்குண்டு பகுதியில் தனியாக தங்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த பொதுமக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் மத்திய புலனாய்வுத்துறையினர் விசாரணை செய்தனர். கியூ பிராஞ்ச் காவல்துறையினர் காசிவிசுவநாதனை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இடை தரகராக செயல்பட்ட காசி
இந்நிலையில் இடைத்தரகராக செயல்பட்ட காசி விஸ்வநாதன் வீட்டில் மத்திய புலனாய்வு துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். அவரது வீட்டிலிருந்து இலங்கை பணம், ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை காவல்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ஊரக உள்ளாட்சி தேர்தல் - பார்வையாளர்களாக ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம்