பொன்னமராவதியைச் சேர்ந்த சின்னையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வார்பட்டி கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் மாசித் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். இதனையடுத்து அரசின் அனுமதி பெற்று மஞ்சுவிரட்டு நடத்தப்படும். இதற்கான அனுமதியும் ஏற்கனவே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் அதற்கான அனுமதி வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றி மார்ச் 12ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.