சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ 13) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.190 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் 4 அலுவலகக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.42 கோடியே 75 லட்சம் செலவில் 15 திருக்கோயில்களில் 25 முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் 2 அலுவலகக் கட்டடங்களை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் 4 அலுவலகக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்
ஊர் | கோயில் | மதிப்பீடு (கோடி) | பணிகள் |
மதுரை | கள்ளழகர் திருக்கோயில் | ரூ.49.25 | பெருந்திட்ட வளாக மேம்பாட்டு பணிகள் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணிகள் |
திருவண்ணாமலை | அருணாச்சலேசுவரர் திருக்கோயில் | ரூ.44.57 | குபேரலிங்கம் அருகில் வணிக வளாகம் கட்டும் பணி |
தண்டாரம் பட்டு வட்டம், வானாபுரம் | பிள்ளையார் மாரியம்மன் திருக்கோயில் | ரூ.5.63 | புதிய திருமண மண்டபம் கட்டும் பணி |
திருவண்ணாமலை | நந்தவக் கட்டளை | ரூ.1.07 | புதிய வணிக வளாகம் கட்டும் பணி |
திருச்சிராப்பள்ளி | மாரியம்மன் திருக்கோயில் சமயபுரம் | ரூ.25.62 | புதிதாக திருக்கோயில் நுழைவு வாயில் அமைக்கும் பணி |
நாகப்பட்டினம் | ஔவையார் மற்றும் விஸ்வநாத சுவாமி திருக்கோயில், துளசியாபட்டினம் | ரூ.18.95 | ஔவையார் மணி மண்டபம் கட்டும் பணி |
கோயம்புத்தூர் | சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மருதமலை | ரூ.6.90 | பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணி |
கருமத்தம்பட்டி | சென்னியாண்டவர் திருக்கோயில் | ரூ.2.29 | புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் அமைக்கும் பணி |
திருப்பூர் | கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் | ரூ.5.40 | புதிய திருமண மண்டபம் கட்டும் பணி |
திருவள்ளூர் | சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி | ரூ.3.80 | பக்தர்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணி |
உள்ளிட்ட பணிகள் என மொத்தம் ரூ.190.40 கோடி மதிப்பீட்டிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.42.75 கோடி செலவிலான 27 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
— TN DIPR (@TNDIPRNEWS) November 13, 2024
(1/2) pic.twitter.com/i2b66Cm5Vs
15 திருக்கோயில்களில் 25 முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் 2 அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தல்
ஊர் | கோயில் | மதிப்பீடு (கோடி) | பணிகள் |
கோயம்புத்தூர் | சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மருதமலை | ரூ.4.39 | சீரமைக்கப்பட்ட திருக்கோயில் மலைபாதை |
நாகப்பட்டினம் | நவநீதேஸ்வரசுவாமி திருக்கோயில் சிக்கல் | ரூ.1.07 | புதிய வணிக வளாகம் |
திருச்சிராப்பள்ளி | மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் | ரூ.4.63 | அமாவாசை மண்டபம் மற்றும் குங்குமம் தயாரிக்கும் கூடம் |
காஞ்சிபுரம் | சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குன்றத்தூர் | ரூ.2.95 | புதிய திருமண மண்டபம் |
கரூர் | கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், தாந்தோன்றிமலை | ரூ.2.09 | முடி காணிக்கை மண்டபம் |
விழுப்புரம் | அங்காளம்மன் திருக்கோயில், மேல் மலையனூர் | ரூ.1.95 | வணிக வளாகம் |
திருவள்ளூர் | தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு | ரூ.1.54 | வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் |
கிருஷ்ணகிரி | காளிகாம்பாள் காமாட்டீஸ்வரர் திருக்கோயில், ஓசூர் | ரூ.76 லட்சம் | மலர் வணிக வளாகம் |
ஈரோடு | சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை | ரூ.61 லட்சம் | புதிய வணிக வளாகம் |
உள்ளிட்ட பணிகள் என மொத்தம் ரூ.42.75 கோடி செலவிலான 27 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.