ETV Bharat / health

சளி, இருமலை விரட்டும் முருங்கைக்காய் சூப்..பக்குவமா எப்படி செய்யனும் தெரியுமா? - WINTER SOUP RECIPES IN TAMIL

குளிர்க்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் பெற வீட்டிலேயே இந்த மிளகு பூண்டு சூப் மற்றும் முருங்கைக்காய் சூப் செய்து பாருங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 13, 2024, 4:21 PM IST

குளிர்க்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், சளி, இரும்மல் போன்ற தொந்தரவுகளும் அழையா விருந்தாளியாக வந்துவிடுகின்றன. குளிர்க்காலத்தில் ஏற்படும் இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, வீட்டிலேயே செய்யும் இந்த மிளகு பூண்டு சூப் மற்றும் முருங்கைக்காய் சூப் செய்து பருகுங்கள். இந்த சூப்களை எப்படி பக்குவமாக செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

பூண்டு மிளகு சூப்:

  • ஒரு மிக்ஸி ஜாரில் 8 பல் பூண்டு மற்றும் அரை டீஸ்பூன் மிளகு மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
  • இப்போது, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 1 டீஸ்பூன் பட்டர் சேர்த்து சூடானதும், நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து 1 நிமிடத்திற்கு வதக்கவும்.
  • அடுத்ததாக,அரை லிட்டர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள். அதன் பின்னர், 1 டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவில் கால் ட்ம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து, கொதித்து கொண்டிருக்கும் சூப்பில் சேர்க்கவும்.
  • இதை சேர்த்ததும், அடுப்பை மிதிமான தீயில் வைத்து கிளறி விடவும். பின்னர், அரை டீஸ்பூன் சீரகத்தூள் மற்றும் மிளகு சேர்த்து கொதிக்க விடுங்கள்.
  • இறுதியாக, நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் குளிர் காலத்திற்கு இதமாக இருக்கும் சூப் ரெடி..

இதையும் படிங்க: மழைக்காலம் வந்தாச்சு! வாங்க விதவிதமாக வெஜிடபிள் சூப் செய்யலாம்...

முருங்கைக்காய் சூப் செய்வது எப்படி:

  • முதலில்,ஒரு குக்கரில் இரண்டு முருங்கைக்காய்களை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். அதனுடன், நறுக்கி வைத்த அரை வெங்காயம், ஒரு தக்காளி சேர்க்கவும்.
  • பின்னர், 5 பல் பூண்டு, நறுக்கி வைத்து அரை துண்டு இஞ்சி, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் சீரகத்தூள், இரண்டரை கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்த பின்னர் மூடி 3 விசில் விடவும்.
  • பின்னர், குக்கரில் இருந்து முருங்கைக்காயை மட்டும் தனி தட்டில் எடுத்து அதில் இருக்கும், சதைகளை ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளவும். இப்போது, வேக வைத்த தண்ணீரில் இருக்கும் வெங்காயம், பூண்டு தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, 1 டீஸ்பூன் பட்டர் சேர்க்கவும். அடுத்ததாக, காய்கறிகளை வேக வைத்த தண்ணீர், அரைத்து வைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
  • அடுத்ததாக, 1 டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் போது, முருங்கைக்காய் சதைகளை சேர்க்கவும். அவ்வளவு தான். சூப்பர் டேஸ்டியான சூப் ரெடி.

இதையும் படிங்க: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சூப்பரான சூப்! ட்ரை பண்ணி பாருங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.