ETV Bharat / state

'நகைக்கடன் தள்ளுபடி; உதயநிதியின் பொய்யான வாக்குறுதியை நம்பி ஏமாந்த மக்கள்!' - மதுரையில் எச் ராஜா

மதுரையின் முதல் மேயர் பாஜக உதவியால் வந்தார். தற்போது பாஜக மேயர் வர வேண்டும் அதற்கு மதுரை மக்கள் உதவ வேண்டும் என மதுரை பரப்புரையில் பேசிய ஹெச். ராஜா, தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அனைத்துப் பணிகளும் மத்திய அரசின் திட்டங்கள் எனச் சுட்டிக்காட்டினார்.

மோடிக்கு ஓட்டு போட சொன்ன திருவள்ளுவர்! - மதுரையில் எச் ராஜா

author img

By

Published : Feb 14, 2022, 3:01 PM IST

மதுரை: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பாக மதுரையில் 44, 45, 46, 47வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்குச் சேகரிப்பில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “பாஜக தனித்துப் போட்டியிடவில்லை; மக்கள் கூட்டணியில்தான் சேர்ந்து போட்டியிடுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் தான் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை

சட்ட அறிவு இல்லாமல் மத்திய அரசுடன மோதுகின்ற போக்கைத் தவிர ஆக்கப்பூர்வமான திட்டம் அவர்களிடம் இல்லை. வெள்ளை அறிக்கையைக் கொடுத்தவர் மதுரை அமைச்சர், பொம்மைபோல் முதலமைச்சர் உள்ளார்.

கரோனா நேரத்தில் பிற நாடுகள் இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்துக் கணித்தன, ஆனால் அதுபோல் நடக்கவில்லை. கரோனாவிலிருந்து நம்மைக் காப்பாற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி, அதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக மக்கள் ஓட்டை அவருக்குப் போட வேண்டும்.

மோடிக்கு ஓட்டுப் போடச் சொன்ன திருவள்ளுவர்!

மதுரையில் ஹெச். ராஜா

மோடிக்கு ஓட்டுப் போடவில்லை என்றால் அது மகாப்பாவம் என்று திருவள்ளுவரே கூறியிருக்கிறார்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

என்ற குறளின்படி மோடிக்கு நன்றி கூறி ஓட்டைப் போட வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள். தற்போது பணத்தைக் கொடுக்கவில்லை, யார் யாருக்குப் பணம் கொடுப்பது என்பது குறித்து ஆணையம் அமைத்துள்ளனர்.

தேர்தலில் வாக்கு கேட்கும்போது நகைக்கடன் தள்ளுபடி செய்வோம், அதனால் வீட்டில் உள்ளவர்கள் நகையை வங்கிகளில் வையுங்கள் என்றார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் தற்போது வரை தள்ளுபடி செய்யவில்லை, பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிய உதயநிதியைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.

ஒரு நாள் ஒரு கோயில் இடிக்க திமுக திட்டம்

ஒரு நாளைக்கு ஒரு கோயிலை இடிக்க வேண்டும் என்று திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். மதுரையில் 200 ஆண்டுகள் பழமையான விட்டுச்சந்தை பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோயிலை இடித்துள்ளனர்.

200 ஆண்டுகள் ஒருவர் தங்கியிருந்தால் அந்த இடம் அவர்களுக்கே சொந்தம். அப்படி இருக்கும்போது எப்படி கோயிலை இடித்தனர். திமுக கட்சியினர் பொண்டாட்டியைக் கோயிலுக்கு அனுப்பிவிட்டு கோயில்களையும் இடிக்கின்றனர்.

தமிழ் எங்களுக்கு முக்கியம் என்கின்றனர் திமுகவினர், ஆனால் நிதியமைச்சரால் ஒரு வார்த்தையைக்கூட திக்காமல் தமிழில் பேச முடியாது. மதுரையின் முதல் மேயர் பாஜக உதவியால் வந்தார், தற்போது பாஜக மேயர் வர வேண்டும். அதற்கு மதுரை மக்கள் உதவ வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:மோடி ஆட்சியில் ரூ.5.35 லட்சம் கோடி மோசடி - ராகுல் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.