மதுரை குற்றப்பிரிவு பகுதியில் மதீனா பள்ளிவாசல் சார்பில் இன்று சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து உரிய விளக்கம் அளிக்காததைக் கண்டித்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து அடையாளப் போராட்டமாக நேற்றிரவு இந்தச் சாலை மறியல் நடைபெற்றது.
இந்தப் போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த மதுரை மாநகர காவல் துணை ஆணையர் கார்த்தி, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு சிறிது நேரத்தில் அனைவரும் சாலை மறியலைக் கைவிட்டு விட்டு கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சிஏஏவை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது - ஆதரவுக்கரம் நீட்டிப்போராடிய பிற மாணவர்கள்