மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நேரு நகர், நடராஜ்நகர் , பழங்காநத்தம் கிராமம், முனியாண்டி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீர் வருவதாகக் கூறி அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரி நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரை தனியார் குடியிருப்புகளுக்கு விற்பனை செய்வதாகவும், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் லாரிகள் மூலம் குடிநீர் விற்பனை செய்வதாகவும் கூறி வாக்குவாதம் செய்தனர். விரைவில் குடிநீர் விநியோகம் சீர் செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததால் மறியிலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.