ETV Bharat / state

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஜாமீன் கோரி மனு!

ஒன்றிய, மாநில அரசுகளை தரக்குறைவாக விமர்சித்து பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பொன்னையா ஜாமீன் கோரியும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் இன்று (ஆக.9) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா
author img

By

Published : Aug 9, 2021, 9:25 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி இன்று (ஆக.9) மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், "ஜூலை 18 ஆம் தேதி அருமனை பகுதியில், கிறிஸ்தவ, இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் பழங்குடியின மக்களுக்காக போராடி உயிரிழந்த அருட்தந்தை ஸ்டேன் ஸ்வாமியின் இறப்பிற்கான கூட்டம் நடைபெற்றது.

அப்போது ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக பேசியதாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் பேசிய விவரங்களில், தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் வேண்டுமென்றே பரப்பப்பட்டுள்ளன.

இதயநோய் உள்பட பல்வேறு உடல் உபாதைகள், வயது முதிர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை (ஆக.9) விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: தற்காப்புக்காகவே அடித்தேன்? - அந்தர்பல்டி அடித்த லக்னோ பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.