மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக மார்ச் 3ஆம் தேதியன்று காரைக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (12606) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது ரயில் இயக்கங்களில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு பயணிகளின் வசதிக்காக மார்ச் 3ஆம் தேதியன்று காரைக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (20605) வழக்கம்போல இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: குடிபோதையில் ரயில்வே ஊழியர் தவறவிட்ட ரூ.9 லட்சம் பணத்தை மீட்டுத்தந்த ரயில்வே காவலர்கள்!