ETV Bharat / state

பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்: 2 வீரர்கள் வெளியேற்றம் - ஆள்மாறாட்டம் செய்து விளையாடிய வீரர்கள் வெளியேற்றம்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் இரண்டு, மூன்றாம் இடத்தில் இருந்த வீரர்கள் முறைகேடாக விளையாடியதாகப் புகார் எழுந்த நிலையில் இருவரையும் வருவாய்த் துறை அலுவலர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றி நடவடிக்கை எடுத்தனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டு
author img

By

Published : Jan 15, 2022, 7:38 PM IST

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (ஜனவரி 15) காலை 7.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், ஐந்தாவது சுற்றின் தொடக்கத்தின்போது முடுவார்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் 17 என்ற எண் கொண்ட சீருடை அணிந்து எட்டு காளைகளைப் பிடித்து இரண்டாவது இடத்தில் இருந்தார்.

இவர் ஆன்லைனில் பதிவுசெய்யப்பட்ட சக்கரவர்த்தி என்பவரது பெயரில் வாங்கிய சீருடையை அணிந்து ஆள்மாற்றி முறைகேடாக விளையாடியது கண்டறியப்பட்டது. இதேபோல் ஐந்து காளைகளைப் பிடித்து 3ஆவது இடத்தில் இருந்த சின்னப்பட்டி தமிழரசன் என்பவர் முடுவார்பட்டியைச் சேர்ந்த கார்த்தி என்பவரது சீருடையை மோசடியாக அணிந்து விளையாடியதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இருவரையும் வருவாய்த் துறையினர் போட்டியிலிருந்து வெளியேற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.

காலை தொடங்கிய போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் களமிறங்கி வீரத்தை வெளிப்படுத்தினர். போட்டியின் முடிவில் 21 காளைகளைப் பிடித்து பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வுசெய்யப்பட்டார். இவருக்கு இருசக்கர வாகனம் முதல் பரிசாக வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: பொங்கல் தொகுப்பு கரும்பில் முறைகேடு? - அரசு கவனிக்குமா...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.