ETV Bharat / state

அக்டோபர் மாதத்தில் மட்டும் பயணிகளிடம் ரூ.1 கோடி அபராதம் வசூல்: தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல்! - fine amount collected in madurai division

அக்டோபர் மாதத்தில் மட்டும் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் மேற்கொள்பவர்கள் குறித்து மேற்கொண்ட சோதனையில், அபராத தொகையாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 1 கோடி அபராதம் வசூல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 10:42 PM IST

மதுரை: தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில், அக்டோபர் மாத பயணச்சீட்டு குறித்து மேற்கொண்ட பரிசோதனையின் வருமானம் குறித்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "பண்டிகை காலமான அக்டோபர் மாதத்தில் ரயில் நிலையங்கள், ரயில்களில் அதிரடி பயணச்சீட்டு சோதனைகள் நடைபெற்றன.

அதன் மூலம் மதுரை கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதனை வருமானமாக 1 கோடியே 8 லட்சத்து 12 ஆயிரத்து 26 ரூபாய் ஈட்டியுள்ளது. பயணச் சீட்டுகள் இல்லாமலும், தகுதியற்ற பயணச்சீட்டுகளை வைத்தும் பயணம் செய்த 15 ஆயிரத்து 734 பேர் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து அபராதமாக 1 கோடியே 6 லட்சத்து 13 ஆயிரத்து 680 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் உரிய பதிவு செய்யாமல், அதிக அளவில் உடைமைகளை ரயில்களில் கொண்டு சென்ற 308 பேர் பிடிக்கப்பட்டு, அவர்களிடம் அபராதமாக 1 லட்சத்து 98 ஆயிரத்து 346 ரூபாய் என, அக்டோபர் மாதம் மட்டும், 1 கோடியே 8 லட்சத்து 12 ஆயிரத்து 26 ரூபாய் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீ விபத்துகளை தவிர்க்க ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்திய ரயில்வே சட்டம் 1989-ல் உள்ள பிரிவுகள் 67, 154, 164, 165 ஆகியவற்றின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க: சென்னை- நெல்லை இடையே 'கரீப் ரத்' சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால், குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை அல்லது 1000 ரூபாய் அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது. தீ விபத்தால் ஏற்படும் நஷ்டம், சேதம், உயிரிழப்பு ஆகியவற்றிற்கும் குற்றவாளி பொறுப்பேற்க நேரிடும்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நாட்களில் பயணச்சீட்டு பரிசோதனையை தீவிரமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் ரயில்களில் அதிக அளவில் பயணிகள் பயணிக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் நவம்பர் 5ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சிறப்பு பயணச்சீட்டு பரிசோதனை நடைபெற உள்ளது.

ரயில்களில் பட்டாசு, மண்ணெண்ணெய், எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லும் பயணிகளை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க ரயில்வே பாதுகாப்பு படையும் தீவிர அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றது" என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கொட்டித்தீர்த்த கனமழையால் குளமாகிய வேளச்சேரி..பொதுமக்கள் கடும் சிரமம்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.