ETV Bharat / state

தீண்டாமை: புதுக்கோட்டை கலெக்டர் உட்பட மூவர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - TN Govt responded in Madurai Branch that

புதுக்கோட்டை இறையூரில் இரட்டைக்குவளை முறை, கோயிலில் அனுமதிக்காதது மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலத்துடன் சாக்கடை நீர் கலந்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட மனித உரிமைகள், சமூக நீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 28, 2022, 7:44 PM IST

மதுரை: புதுக்கோட்டை இறையூரில் இரட்டைக்குவளை முறை, கோயிலில் அனுமதிக்காதது மற்றும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மலத்துடன் சாக்கடை நீர் கலந்தது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் எடுத்த நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில்(Eraiyur-Vengai Vayal, Pudukkottai Dt), அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, அப்பகுதியில் இரட்டைக்குவளை முறை (Two Tumbler System) வழக்கத்தில் இருந்தது தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் பொறுத்தவரை பல கிராமங்களிலும் இதுபோன்ற தீண்டாமை கொடுமைகள் (Untouchability) நடைபெற்று வருகின்றன.

ஆகவே, புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் தீண்டாமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், புதுக்கோட்டை இறையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று (டிச.28) காலை அவசர வழக்கமாக எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.

மலம் கலந்த குடிநீர் ; 3 வழக்குப்பதிவு: இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு தரப்பில், 'இரட்டைக்குவளை முறை, கோயிலில் அனுமதிக்காதது மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலத்துடன் சாக்கடை நீர் கலந்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: இரட்டைக்குவளை முறை, கோயிலில் அனுமதிக்காதது தொடர்பாக 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மலத்துடன் கழிவு நீர் கலந்தது தொடர்பாக நபர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' எனத் தெரிவிக்கப்பட்டது.

வரும் ஜன.5-க்கு ஒத்திவைப்பு: இதனையடுத்து நீதிபதிகள், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது. வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: புதுக்கோட்டை தீண்டாமை கொடுமைக்கு முடிவுகட்டிய ஆட்சியர் - முழு விபரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.