ETV Bharat / state

மின் கம்பங்கள் அமைக்க மரங்கள் வெட்டினால் அருகில் புதிய மரக்கன்று நட உத்தரவு - மின் கம்பங்கள்

மின் கம்பங்கள் அமைக்க வெட்டப்பட்ட மரங்களுக்கு ஏற்ப, அருகிலேயே இருமடங்கு மரங்கள் நட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மரங்கள்
மரங்கள்
author img

By

Published : Aug 1, 2022, 9:29 PM IST

மதுரை: திருச்சி லால்குடியை சேர்ந்த அசோக் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள எல்.அபிசேகபுரத்தில் துணை மின்நிலையம் அமைக்க குக்கூர் சாலையில் பனை மரங்களை வெட்டி மின் கம்பங்களை நட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

50 ஆண்டுகள் பலன் தரும் பனை மரங்களை வெட்டாமல், மாற்று பாதையில் மின் கம்பங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், மின்கம்பங்களை அமைப்பதற்கு 13 பனை மரங்களை வெட்ட வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மின் கம்பங்கள் அமைக்கும் போது முடிந்தவரையில் மரங்கள் வெட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தவிர்க்க முடியாத நிலையில் தான் மரங்களை வெட்ட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஏற்ப சாலையின் மறுபுறத்தில் இரு மடங்கு புதிய மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்தனர்.

இதையும் படிங்க: கச்சநத்தம் படுகொலை வழக்கு: 27 பேர் குற்றவாளிகள் - சிவகங்கை நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.