கடந்த 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி மகாத்மா காந்தி மதுரை வந்திருந்தார். அதே மாதம் 22ஆம் தேதி மதுரை காமராஜர் சாலையில் அரையாடை விரதமிருந்து பொதுமக்களிடம் உரையாற்றினார். அன்றிலிருந்து இன்று வரை அவ்விடம் காந்தி பொட்டல் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
அரையாடை விரதமிருந்த பிறகு காந்தி பேசிய முதல் பொதுக்கூட்டம் என்பதால் அப்பகுதி சிவாஜி ரசிகர் மன்றத்தினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து 1984ஆம் ஆண்டு காந்தி சிலை ஒன்று அமைத்தனர். இச்சிலை தற்போது சேதமடைந்ததால் ரூ.5 லட்சம் செலவில் சிவாஜி ரசிகர்கள் அதே இடத்தில் காந்தியின் புதிய வெண்கலச் சிலையை நிறுவியுள்ளனர். சிலையை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் சரவணன். மதுரை மக்களவை முன்னாள் உறுப்பினர் ராம்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு மரியாதை!