மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தில் அருகே பெட்ரோல், டீசல் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாகக் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடினர்.
இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த கணேஷ் என்பவர் உடல் கருகி பலியானார். அதனைத்தொடர்ந்து குடோனில் இருந்த ஆசை, உதயகுமார், கார்த்திக், நாகராஜ் ஆகிய நான்கு பேர் பலத்த தீக்காயங்களுடன் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தவர்கள் குறித்து காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின் திருப்பரங்குன்றம், திருமங்கலம் தீயணைப்புத் துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்களில் சுமார் அரை மணி நேரம் போராடி தீயைஅணைத்தனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அருகில் உள்ள குடோனில் இந்த விபத்து ஏற்பட்டது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
இதையும் படிங்க: கணவர் கொலையில் திடீர் திருப்பம் - மனைவி, மைத்துனரின் கூட்டுச்சதி அம்பலம்