மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (45). இவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் உத்தப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த முத்தையா (47) என்பவர் உள்ளாட்சித் தேர்தலில் பால்ராஜ்ஜுக்கு எதிராக சில மறைமுக செயல்களில் ஈடுபட்டதாக கூறி முத்தையா தரப்பினர் சிலர் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இவர்களுக்குள் தகராறு முற்றிய நிலையில் முத்தையாவை பால்ராஜ், முருகன், பவுன்ராஜ் உள்ளிட்ட சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஏழுமலை காவல் துறையினர் முத்தையாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மதுரை ராஜாஜி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முத்தையாவை கொலை செய்த்தால் ஆத்திரமடைந்த முத்தையா உறவினர்கள் பால்ராஜ் வீட்டில் கற்களை வீசியும் அவருக்குச் சொந்தமான டிராக்டருக்கு தீ வைத்தும் எரித்தனர்.
இதனையடுத்து பால்ராஜ் எழுமலை காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொடூரக் கொலை - போலீஸ் விசாரணை