ETV Bharat / state

பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் மருத்துவ உதவி - எம்.பி. தகவல் - One crore rupees medical aid from the Prime Minister's Relief Fund

மதுரை: பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ஓராண்டில் 40 பேருக்கு ஒரு கோடியே இரண்டு லட்சம் ரூபாய் மருத்துவ நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது என மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார்.

MP S. Venkatesan
MP S. Venkatesan
author img

By

Published : Nov 3, 2020, 2:24 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த (2019-2020) நிதியாண்டில் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவி கோரி பொதுமக்களிடமிருந்து 74 மனுக்கள் பெறப்பட்டு பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 40 நபர்களுக்கு ஒரு கோடியே இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மருத்துவ நிவாரண உதவித்தொகை இதுவரை கிடைத்துள்ளது.

இன்னும் 34 நபர்களுக்கு நிவாரண நிதி வரவேண்டியுள்ளது. இதுவரை பல்வேறு புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட 36 நபர்களுக்கு 97 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், இதய அறுவை சிகிச்சை தொடர்பாக நான்கு நபர்களுக்கு நான்கு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதியாகக் கிடைத்துள்ளது.

ஒரு ஆண்டுக்குள் ஒரு கோடி ரூபாய் பெற்றுத் தருவது என்ற இலக்கோடு செயல்பட்டோம். கரோனா காலமாதலால் இலக்கை அடைய மூன்றுமாத காலம் கூடுதலாக ஆகியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.