மதுரையில் நேற்று பல்வேறு இடங்களில் திடீரென பலத்த இடியுடன் பெய்த கோடை மழையால் கோரிப்பாளையம், சிம்மக்கல், அண்ணாநகர், திருப்பரங்குன்றம், திருநகர், பெருங்குடி, அவனியாபுரம் பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாநகர் முக்கிய பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. மேலும் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பழமையான மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இந்நிலையில் மரத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புது கார் மீது மரம் விழுந்ததில் கார் சேதம் அடைந்தது.
இதுகுறித்து மதுரை தீயணைப்பு துறையினர், காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மரத்தை இயந்திரம் கொண்டு அறுத்து பின்னர் அப்புறப்படுத்தினர்.
இதையும் படிங்க: 5 மாநகராட்சிகளில் முழு அடைப்பு: குறைந்த பணியாளர்களுடன் வங்கிகள் செயல்படும்