ETV Bharat / state

சிறுமியை திருமணம் செய்த வடமாநில இளைஞர் கைது! - madurai thirumangalam

மதுரை: திருமங்கலம் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த வடமாநில இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

north indian guy
north indian guy
author img

By

Published : Jul 29, 2020, 12:53 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பெரிய உலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகள் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். விடுமுறை காலத்தில் விருசங்குளம் கிராமத்திலுள்ள ஃபுட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது, அதே கம்பெனியில் வேலை பார்த்த பிகார் மாநிலத்தைச் அமர்ஜித்(22) என்பவர், அந்த மாணவியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி சிறுமியின் வீட்டாருக்கு தெரியாமல் அமர்ஜித் சிறுமியை திருமணம் செய்துள்ளார். தகவலறிந்த மாணவியின் தந்தை மணிகண்டன் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் 18 வயது பூர்த்தி அடையாத பள்ளி மாணவியை திருமணம் செய்த காரணத்தால் வடமாநில இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியப் படமாக வெளியாகும் தல நடிக்கும் 'வலிமை'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.