ETV Bharat / state

கஷ்டத்திலும் படிக்க வைக்கும் சித்தி; இறந்த தாயின் பணியைக் கேட்டு குழந்தைகள் மனு! - mid day meal workers

மதுரை: ஓராண்டிற்கு முன் இறந்துபோன தங்களது தாய்க்குச் சத்துணவு பணி வந்ததால், அதனை தங்கள் சித்திக்கு வழங்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் குழந்தைகள் இருவரும் மனு கொடுத்தனர்.

விசாலினி மற்றும் குணால்
author img

By

Published : Jul 18, 2019, 1:09 PM IST

மதுரை மாவட்டம் மணப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவரின் மனைவி பொம்மி ஓராண்டுக்கு முன்பு அங்கன்வாடி பணிக்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் சமையல் உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை வந்தது.

இதற்கிடையே பணிக்கு விண்ணப்பித்த சில மாதங்களிலேயே பொம்மி இறந்துவிட்டார். பொம்மிக்கு ஏழாண்டுகளுக்கு முன்பே அவரது கணவரும் இறந்தது குறிப்பிடத்தக்கது.

விசாலினி மற்றும் குணால்

பொம்மியின் குழந்தைகள் விசாலினி, குணால் ஆகிய இருவரையும் சித்தி பாண்டி மீனாள் தனது பொறுப்பில் வளர்த்து வருகின்றார். இறந்துபோன தங்கள் தாயாருக்கு வந்த சத்துணவு உதவியாளர் வேலையை தங்களது சித்திக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு குழந்தைகளும் மனு அளித்தனர்

இதுகுறித்து மாணவி விசாலினி கூறுகையில், “தற்போது எங்களது சித்தியின் பராமரிப்பில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். மிகக் கஷ்டமான நிலையிலும், அவர்கள் எங்களைப் படிக்க வைத்து வருகிறார்கள். ஆகையால் மதுரை மாவட்ட ஆட்சியர் எங்களது தாயாருக்கு வந்த சத்துணவு உதவியாளர் வேலையைச் சித்திக்கு வழங்கினால், ஆதரவற்ற எங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்” என்று கூறினார்.

Intro:மறைந்த தாயின் சத்துணவு பணியிடத்தை சித்திக்காக கேட்டு ஆட்சியரிடம் மனு செய்த பள்ளி குழந்தைகள்

ஓராண்டிற்கு முன் இறந்து போன தங்களது தாய்க்கு சத்துணவு பணியின் பொருட்டு வந்த வேலையை தங்களது சித்திக்கு வழங்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி குழந்தைகள் இருவர் இன்று மனு கொடுத்தனர்Body:மறைந்த தாயின் சத்துணவு பணியிடத்தை சித்திக்காக கேட்டு ஆட்சியரிடம் மனு செய்த பள்ளி குழந்தைகள்

ஓராண்டிற்கு முன் இறந்து போன தங்களது தாய்க்கு சத்துணவு பணியின் பொருட்டு வந்த வேலையை தங்களது சித்திக்கு வழங்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி குழந்தைகள் இருவர் இன்று மனு கொடுத்தனர்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ளது மணப்பச்சேரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவரின் மனைவி பொம்மி கடந்த ஓராண்டுக்கு முன்பாக அங்கன்வாடி பணிக்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் சமையல் உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை வந்திருந்தது.

இதற்கிடையே பணிக்கு விண்ணப்பித்து சில மாதங்களிலேயே கடந்த ஓராண்டுக்கு முன்பாக பொம்மி இறந்து விட்டார் அவரது குழந்தைகள் விசாலினி 11ஆம் வகுப்பு படிக்கிறார் குணால் ஒன்பதாம் வகுப்பு பயில்கிறார். இவர்களின் தந்தை கடந்த ஏழாண்டுகளுக்கு முன்னரே தலையில் அடிபட்டு இறந்து விட்டார் இதற்கிடையே குழந்தைகள் இருவரையும் மிக கஷ்டமான சூழலில் பொம்மி வளர்த்து வந்தார்.

தற்போது பொம்மியும் இறந்துவிட்ட நிலையில் விஷாலினி மற்றும் குணால் ஆகியோரை சித்தி பாண்டி மீனாள் தனது பொறுப்பில் வளர்த்து வருகின்றார். இறந்துபோன தங்கள் தாயாருக்கு வந்த சத்துணவு உதவியாளர் வேலையை தங்களது சித்திக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விசாலினியும் குணாலும் மனு அளித்தனர்

இது குறித்து மாணவி விஷாலினி கூறுகையில் தற்போது எங்களது சித்தி சித்தப்பாவின் பராமரிப்பில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் மிக கஷ்டமான நிலையில் அவர்கள் எங்களை படிக்க வைத்து வருகிறார்கள் ஆகையால் மதுரை மாவட்ட ஆட்சியர் எங்களது தாயாருக்கு வந்த சத்துணவு உதவியாளர் வேலையை எங்கள் சித்திக்கு வழங்கினால் ஆதரவற்ற எங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும் என்றார்

விஷாலினியின் அத்தை இளவரசி கூறுகையில், மிக ஏழ்மை நிலையில் வசித்து வரும் பாண்டி மீனாளுக்கு சத்துணவு உதவியாளர் வேலையை வழங்கி குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு மாவட்ட ஆட்சியர் வழி செய்ய உத்தரவிட வேண்டும் என்றார்

(இதற்குரிய வீடியோ மற்றும் விஷுவல் மோஜோ வழியாக அனுப்பப்பட்டுள்ளது)
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.