மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, “அதிமுகவில் 50க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து கிட்டத்தட்ட 25 இடங்களில் ஆழ்துளை குழாய்கள் மூலம் குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மதுரை வடக்கு தொகுதியில் மாநகராட்சி நிர்வாகம் தங்களோடு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். சென்னையை தவிர வேறு எங்கும் தண்ணீர் பஞ்சம் இல்லை, எதிர்க்கட்சிகள் தான் பொது மக்களை திசை திருப்புகின்றனர். திமுக நேற்று நடத்திய போராட்டத்தில் அக்கட்சியினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பொதுமக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருந்திருந்தால் பொதுமக்களே போராடியிருப்பார்கள். திமுக அரசியல் லாபத்திற்காக மட்டுமே குடிநீர் பிரச்னையை கிளப்பி வருகின்றது” என்றார்.