ETV Bharat / state

’குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பும் இல்லை’ -  அமைச்சர் ஆர்பி உதயகுமார்!

மதுரை: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

rb.Udayakumar
rb.Udayakumar
author img

By

Published : Dec 21, 2019, 10:05 AM IST

தமிழ்நாட்டில் வருகிற 27, 30ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் மதுரை உச்சப்பட்டி, கப்பலூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களையும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்குகள் சேகரித்தார்.

அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களைச் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் 100 விழுக்காடு வெற்றிகளை பெறப்போவது உறுதி. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதுதான் உண்மை. சட்டம் முழுமையாக செயல்படுத்தும்போதுதான் அதற்கான நன்மைகள் நமக்கு தெரியவரும். ஆனால், கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தியும் மாணவர்களின் எதிர்காலத்தை பலி கொடுக்கும் வகையில் போராட்டத்தை தூண்டியும் விடுகின்றனர்.

கமல்ஹாசன் திமுகவோடு சேர்ந்தாலும் யார் யாரோடு சேர்ந்தாலும் அதிமுகவின் வெற்றி 100 விழுக்காடு உறுதி. அதிமுக என்னும் பெரும் இயக்கத்தை யாராலும் அழித்துவிட முடியாது என்பது உண்மையிலும் உண்மை. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அதிமுகவை பொங்கல் பரிசு கொடுக்க விடாமல் எதிர்கட்சி சதி செய்துவருகிறது” என்று கூறினார்.

Intro:7 *தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் மதுரை உச்சப்பட்டி, கப்பலூர் பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார்.*

tn_mdu_07_Minister_rb.Udayakumara_byte_script_visual_tn10028 in wrapBody:*தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் மதுரை உச்சப்பட்டி, கப்பலூர் பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார்.*

*தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது*

தமிழக அரசு 1000 கணக்கான வளர்ச்சி திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்களை சொல்லி வருகிற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றிகளை பெறப்போவது உறுதி.

எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் அந்த சட்டத்தை நிறைவேற்றுவதில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடைபெறுகிறது, அந்த விவாதத்தின் போது அந்த மசோதாவில் உள்ள விவரங்களை முன்வைக்கிறார்கள். அதன்பிறகுதான் அந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவு பெறுகிறது,
சில திருத்தங்களை காலத்தின் அவசியம் கருதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது இந்த குடியுரிமை சட்டத்தின் மூலமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதுதான் உண்மை.

கற்பனை காரணங்களை உருவாக்கி கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியும், போராட்டத்தை தூண்டி விடுகின்றனர்.

தற்சமயம் சட்டம் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை, முழுமையாக செயல்படுத்தும் பொழுது தான் அதற்கான நன்மைகள் தெரியவரும்.

முழு புரிதல் இல்லாத காரணத்தினால்தான் மாணவர்களின் எதிர்காலத்தை பலி கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் மாணவர்களை பயன்படுத்தி போராட்டங்கள் போன்ற பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீய சக்திகளில் மாணவர்கள் சிக்கியுள்ளார்கள் இது அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது உண்மை.

குடியுரிமை சட்டத்தின் மூலமாக இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை.

இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஆயிரம் பேருக்கு குடியுரிமைச் சட்டம் மறுக்கப்பட்டுள்ளது என்று வாதாடினால் பரவாயில்லை. குடியுரிமை சட்டம் உச்சநீதிமன்றத்தில் வழக்கில் உள்ளது.

குடியுரிமை சட்டத்தின் மீது ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம், அதன்படி உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளனர்.

தர்மத்தின் பக்கம் மாணவர்கள் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.

பாரத பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் நமக்கு உறுதி கொடுத்துள்ளனர். அவர்கள் தான் அரசை நடத்துகிறார்கள், அவர்கள் உறுதி கொடுக்கவில்லையென்றால் போராட்டம் நடத்தலாம் அவர்களது கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம்.

உறுதி கொடுத்த பின்பும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டால் அதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காட்டுகிறது.

கமலஹாசன் திமுகவோடு சேர்ந்தாலும் யார் யாரோடு சேர்ந்தாலும் எங்களது வெற்றி 100% உறுதி. அதிமுக இன்னும் பெரும் இயக்கத்தை யாராலும் அழித்துவிட முடியாது என்பது உண்மையிலும் உண்மை.

பொங்கல் பரிசு கொடுக்க தொடர்ந்து தடை கேட்டு வருகிறது எதிர்கட்சி, தற்சமயத்துக்கு தேர்தல் நடத்தப்படாத மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசு வழங்க உள்ளோம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே தடை கேட்கிறார்கள். பொங்கல் பரிசு கொடுக்க விடாமல் எதிர்க்கட்சியினர் சதி செய்கிறார்கள்.

இந்தியாவிலேயே அதிக தேசிய விருதுகளைப் பெற்ற மாநிலம் தமிழகம் என்பதில் இந்த அரசும் மக்களும் தமிழக மக்களும் பெருமிதம் கொள்வோம் என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.