ETV Bharat / state

'எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடிதான் பறக்கும்!'

மதுரை: '2021இல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும்!' என்ற பாஜக மாநிலத் தலைவர் எல். முருகனின் சூளுரைக்கு, 'எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடிதான் பறக்கும்!' என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளித்துள்ளார்.

பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

author img

By

Published : Sep 21, 2020, 8:53 PM IST

மதுரை எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் விழிப்புணர்வுப் பயிற்சி, ஒத்திகை நிகழ்ச்சிகளை மதுரை மாவட்ட தீயணைப்புத் துறையினர் மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆட்சியர் வினய் உள்ளிட்டோர், உயிர்காக்கும் கவச உடைகளை அணிந்து தீயணைப்புத் துறையினர் ஒத்திகை நிகழ்வுகளைப் பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,

"தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மூலம் 60 சதவீதம் குடிநீர், விவசாய தேவைகள் பூர்த்தியடையும். உயிர், உடமை, கால்நடைகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பேரிடர் மற்றும் மீட்புப்பணிகள், நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன.

வடகிழக்குப் பருவமழையையொட்டி நீர் சேமிப்பு பகுதிகளிலும், நீர் நிலைகள் அனைத்தும் குடிமராமத்துப் பணிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் வெற்றிகரமாக பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். கடலோர மாவட்டங்களில் நிரந்தர புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. பள்ளி, கல்லூரிகளை நிவாரண முகாம்களாக மாற்றி உள்ளோம். கரோனா காலம் என்பதால் நிவாரண முகாம்களில் சமூக இடைவெளி, கழிவறை உள்ளிட்ட வசதிகளை கூடுதலாக ஏற்படுத்தி உள்ளோம். மதுரை மாவட்டத்தில் 27 தாழ்வான பகுதிகளும், 31 நிலைக்குழுக்கள், 33 நிவாரணக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

காலத்திற்கேற்ற வகையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை விவசாயத்துறையில் மேற்கொள்ள உள்ளோம். நவீன காலத்திற்கேற்ப விவசாயத்தை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. நவீன கால விவசாயத்திற்கு ஏற்றது என மசோதா குறித்து முதல்வரும், பிரதமரும் துறை சார்ந்த அமைச்சரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் எல்லா மசோதாக்களையும் எதிர்ப்பது போல விவசாய மசோதாவையும் எதிர்க்கின்றனர், அவர்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது என்று தெரியவில்லை. நவீன காலத்திற்கேற்ப விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்த விவசாய மசோதா உதவும்" என்றார்.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும் என எல். முருகன் பேசியது குறித்த கேள்விக்கு, "எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடிதான் பறக்கும். அந்தந்த கட்சித்தலைவர்கள் அவரவர் கொடிகளைத் தூக்கிப்பிடிக்க உரிமை உள்ளது. அவர் கட்சிக்கொடியை தூக்கிப்பிடிக்கத்தான் அவரை தலைவராக நியமித்துள்ளனர்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: தவறாக பரப்புரை செய்யும் எதிர்க்கட்சிகள் - தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.