கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும்பொருட்டு, ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக, பொது போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அத்தியாவசியத் தேவைக்காக, ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு பயணிப்போர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகி, இ-பாஸ் பெற்றப் பின்பு பிற மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சிலர் உரிய காரணங்களின்றி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்குப் போலி பாஸ் வாயிலாக வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வீரவநல்லூர் கம்ப்யூட்டர் சென்டர் மூலம் போலி இ-பாஸ் தயாரிக்க உதவியதாக, திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக, தனக்கு முன்பிணை கோரி ஜாபர் சாதிக் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க... செல்லுபடியாகாத பாஸ்டேக் அட்டையுடன் வரும் வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம்!