ETV Bharat / state

மதுரையில் என்ஐஏ சோதனை! - Madurai news today

NIA Raid in Madurai: மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 7:45 AM IST

Updated : Oct 11, 2023, 11:18 AM IST

மதுரை: மதுரையில் இன்று (அக்.11) காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை காஜிமார் தெருவைச் சேர்ந்தவர், முகமது தாஜுதீன். இவர் வகுத்ததே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில், இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வகுத்ததே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பினைச் சேர்ந்த தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் நபர்களிடம் இவர் தொடர்பில் இருந்தாரா என அவரது வீட்டில் டெல்லியில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, கோவை உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேரளா ரயில் தீ விபத்து வழக்கு; கொச்சி நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்!

Last Updated : Oct 11, 2023, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.