கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவளிக்கும் விதமாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கடந்த மே 1ஆம் தேதி முதல் 'மாமதுரை அன்னவாசல்' என்னும் திட்டத்தைத் தொடங்கினார்.
இதில் கடந்த 20 நாட்களாக தன்னார்வலராகப் பணிபுரிந்த வீரக்குமார் என்ற இளைஞனுக்கு சமயநல்லூரில் இன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
ஊரடங்கு காரணத்தினால் திருமணம் எளிமையான முறையில் நடத்தப்பட்டதால், திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைக்கொண்டு 'மாமதுரை அன்னவாசல்' திட்டத்தின் மூலம் சுமார் 420 ஏழை - எளிய மக்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தனர்.
புதுமண தம்பதியினரின் இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய புதுமண தம்பதி!