மதுரை : மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் மதுரை தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.700 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பேங்க் காலனி அருகே மேம்பாலம் கட்டுமானப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
ஒருவர் உயிரிழப்பு
இதனையடுத்து அங்கு சென்ற 40க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 3 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர், காவல்துறை உயர் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மூன்று மாதங்களில் பிரஸ் கவுன்சில் -தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு