ETV Bharat / state

வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு - மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

ஓசூர், மதுரை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

new-year-celebrations
new-year-celebrations
author img

By

Published : Jan 2, 2020, 7:16 AM IST

புத்தாண்டை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் பாரம்பரிய முறைப்படி நிலக்கடலை வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் பக்தர்கள் ஆஞ்சநயேர் சுவாமி மீது நிலக்கடலையை வீசி வழிபாடு செய்தனர். இவ்வழிபாடு 62 ஆண்டுகளாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல புத்தாண்டில் வழிபாடு செய்ய மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து மீனாட்சி அம்மனை தரிசித்தனர். தரிசனத்தில் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து புத்தாண்டை வெகுவிமர்சையாக கொண்டாடினர். குணா குகை, தூண் பாறை, ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பல்வேறு மாவட்டங்களில் புத்தாண்டு கொண்டாட்டம்

அதேபோல், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் குபேர பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். புதுச்சேரியிலுள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து புத்தாண்டைக் கொண்டாடினர். இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

கள்ளக்குறிச்சியில் புத்தாண்டை முன்னிட்டு சாலைப் போக்குவரத்து பொறியியல் கல்லூரி மாணவர்கள், மாடூர் சுங்கச்சாவடி சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டனர். புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக பெரம்பலூரிலுள்ள தனியார் பேக்கரி சார்பில் பிரமாண்ட கேக் திருவிழா புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில், வாடிக்கையாளர்களின் புகைப்படங்கள் வரையப்பட்ட கேக், வானவில் வண்ணம் கொண்ட ரெயின்போ கேக் உள்ளிட்டவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதையும் படிங்க: 1,100 மில்லி தங்கத்தில் புத்தாண்டு கேக் - நகைத்தொழிலாளி சாதனை!

Intro:ஓசூரில் புத்தாண்டில் நாடு நலம்பெற,விவசாயம் செழிக்க வேண்டி கடலைக்காய் திருவிழா ஆஞ்சநேயர் மீது நிலக்கடலையை எறிந்து பக்தர்கள் நூதன வழிபாடு.Body:ஓசூரில் புத்தாண்டில் நாடு நலம்பெற,விவசாயம் செழிக்க வேண்டி கடலைக்காய் திருவிழா ஆஞ்சநேயர் மீது நிலக்கடலையை எறிந்து பக்தர்கள் நூதன வழிபாடு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் புத்தாண்டையொட்டி நாடு நலம்பெற வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய முறைப்படி நிலக்கடலையை எறியும்/கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆஞ்சநயேர் சுவாமி மீது நிலக்கடலையை/கடலைக்காயை எரிந்து நூதன வழிபாட்டை மேற்கொண்டனர்.
ஓசூர் ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் 62 ஆம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று இந்த கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெறும் அதைபோல இன்று நடைபெற்ற விழாவில் ஆஞ்சநேயருக்கு காலை முதலே கோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் கடலைக்காய்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதனைத்தொடர்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கடலைக்காயை ஆஞ்சநேயர் பிரகாரத்தின் மீதும் ஆஞ்சநேயர் சாமியின் மீது எரிந்து வழிபாடு நடத்தினர்.

இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பேசிய பக்தர்கள், புத்தாண்டு பிறக்கும் போது ஆஞ்சநேயரின் மனம் குளிரும் வகையில் கடலைக்காயை அவர் மீது எரிந்து வழிபட்டால் நாடு செழிக்கும் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை, பாரம்பரியமாக நடத்தப்பட்ட இந்த திருவிழா தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வேறு எந்த பகுதியிலும் இதுபோன்ற வழிபாடுகள் நடைபெறுவது இல்லை என தெரிவித்தனர்.

நிலக்கடலை பற்றிய தகவல்:

நிலக்கடலைக்கு பொதுவாக தமிழகத்தில் பல்வேறு வட்டாரங்களில் விளைவிக்கப்படும் பல பெயர்கள் வைமேற்கு மண்டல மட்டங்களில் கடலைக்காய் என்றும், வடக்கு மண்டல வட்டாரங்களில் மல்லாட்டை என்றும், கிழக்கு மண்டல வட்டாரங்களில் மணிலா கொட்டை என்றும், தெற்கு மண்டலங்களில் நிலக்கடலை என்றும் அழைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.