தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ஆறாக விளங்கக் கூடிய மதுரை வைகை ஆறு கடந்த சில நாட்களாக வறண்டு காணப்படுகிறது. வைகையில் தண்ணீர் இல்லாததால் ஒரு சிலர் அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஆற்றின் கீழத்தோப்பு பகுதியில் வாகனங்களை நிறுத்தி வருமானம் ஈட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வாகனங்களில் வரும் சுற்றுலாப் பணிகள் தங்களது வாகனங்களை வைகை ஆற்றுக்குள் நிறுத்தி-வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அலுவலர்களின் அலட்சியப் போக்கால் காக்கப்பட வேண்டிய வைகை ஆறு ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவித்துவருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.