நெடுஞ்சாலைகளில் சாலைகளுக்கு நடுவே உள்ள செவ்வரளிச் செடிகள் எல்லாப் பருவ நிலையிலும் செழித்து வளரக் கூடியது. இது வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையில் மாசுக்களை அகற்றி, தூயக்காற்றாக மாற்றும் தன்மைகொண்டது.
அது மட்டுமின்றி, இரவு நேரத்தில் சாலைகளில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் எதிர்வரும் வாகன ஓட்டிகளின் மீது படாமல் தடுக்கும் வேலியாகவும் இவை உள்ளன.
மதுரையில் வழக்கத்தைவிட இந்தாண்டு பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் அதிகரித்ததுடன் அனல் காற்றும் வீசிவருவதால் காற்றில் ஈரப்பதம் இல்லாத சூழலில் செடிகள், புல் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக எளிதில் தீப்பற்றக் கூடியதாகும் சருகுகளாக இருந்துவருகிறது. இதற்கிடையில், மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவ்வழியாகச் செல்லும்போது மதுபாட்டில்கள், அணைக்காத சிகரெட் துண்டுகள் உள்ளிட்டவைகளை தூக்கி எறிந்துவிட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக சாலைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:சென்னையில் அதிகரிக்கும் கரோனா பரவல் - கூடுதல் சிறப்புக் குழுவை நியமித்து உத்தரவு
!