ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கு ஒத்திவைப்பு - நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட ரஷீத்

மதுரை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் ஜாமீன் கோரி ரஷீத் தொடர்ந்த வழக்கை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

neet exam impersonation bail case adjournment by madurai high court bench

author img

By

Published : Feb 22, 2021, 1:17 PM IST

கேரளா மாநிலம் உன்னியாலைச் சேர்ந்த ரஷீத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், " நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

இந்த வழக்கில் எனது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் உறுதியாக ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன் ஆகவே ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், வழக்கை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.