ETV Bharat / state

மதுரை விக்டோரியா எட்வர்ட் மன்றத்திற்கு பூட்டு - நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்! - நாம் தமிழர் கட்சி

மதுரையில் பாரம்பரிய பெருமைமிக்க விக்டோரியா எட்வர்ட் மன்ற செயலாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல்துறை கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Naam Tamilar Katchi protested demanding the arrest of madurai victoria edward hall Secretary Ismail
விக்டோரியா எட்வர்ட் மன்ற செயலாளர் இஸ்மாயிலை கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
author img

By

Published : Mar 5, 2023, 9:37 AM IST

Updated : Mar 5, 2023, 11:33 AM IST

விக்டோரியா எட்வர்ட் மன்ற செயலாளர் இஸ்மாயிலை கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை: நூறாண்டுகளுக்கு மேல் பழமையும் பெருமையும் மிக்க மதுரை விக்டோரியா எட்வர்ட் மன்றம் பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை கொண்ட பொது நிறுவனம் ஆகும். இந்த அமைப்பு நிர்வாகம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனிநபர் ஒருவரின் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் இங்கு நிதி முறைகேடுகளும் நிர்வாக சீர்கேடுகளும் நடைபெற்றுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த மன்றம் தொடர்பான வழக்கு ஒன்றில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி மன்றத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே மேற்கொள்ள மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தனி அலுவலராக பத்திரப்பதிவு அலுவலர் ரவீந்திரநாத்தை நியமனம் செய்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்டோரியா எட்வர்ட் மன்றத்திற்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் தனி அலுவலர் ரவீந்தரநாத் நேற்று மன்றத்திற்கு சென்றபோது மன்ற செயலாளர் இஸ்மாயில் இரும்பு சங்கிலியால் பூட்டி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியினர், மன்றத்திற்கு பூட்டு போடுவதாக அறிவித்து போராட்டம் நடத்தினர். கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் கூறுகையில், "மதுரையின் மிக பாரம்பரியமும் பழமையும் மிக்க விக்டோரியா ஏட்வர்ட் மன்றம் இஸ்மாயில் என்ற தனிநபரின் கையில் சிக்கி பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை சந்தித்து வருகிறது.

தனி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட பதிவாளரை உள்ளே நுழைய விடாமல் மன்றத்தை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்த சட்ட மீறலை கேள்வி கேட்காமல் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மேல் பல்வேறு வழக்குகள் தற்போதும் உள்ளன. பொதுமக்கள் அனைவரும் வந்து செல்லக்கூடிய பொது இடத்தை தனது சொத்தாக எண்ணிக் கொண்டு பெரும் முறைகேடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

நீதியை நிலைநாட்டுவதற்கு கூட இங்கு போராட்டம் நடத்த வேண்டி உள்ளது. சட்டப்படி பொறுப்பேற்றுக் கொண்ட தனி அலுவலரை பணி செய்ய விடாமல் பூட்டு போட்ட விக்டோரியா எட்வர்ட் மன்ற செயலாளர் இஸ்மாயிலை காவல்துறை உடனடியாக கைது செய்து நடவடிக்கை டுக்க வேண்டும்" என்றார்.

பிரிட்டிஷ் காலத்தில் துவக்கப்பட்ட இம்மன்றத்தில் நுாலகம், திறந்தவெளி அரங்கம், கடைகள் நிறைந்த வணிக வளாகம் ஆகியவை உள்ளன. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் மன்றத்திற்கு வருமானமாக கிடைக்கிறது. இந்த அமைப்பின் நிர்வாகம் கடந்த 25 ஆண்டுகளாக ஒரு சிலரின் ஆதிக்கத்தில் உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து விக்டோரியா எட்வர்ட் மன்ற மீட்புக்குழு உருவாக்கப்பட்டு தலைவராக ஜெயராமன், செயலாளராக முத்துக்குமரன் செயல்படுகின்றனர்.

இவ்வழக்கு தொடர்பாக கலெக்டர் அனீஷ்சேகர் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில், "உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2022 அக்.,22ல் வழங்கப்பட்ட தீர்ப்பை செயல்படுத்தும் விதமாக 1975ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் பிரிவு 34 ஏ-ன் வரையறைக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. 1978ம் ஆண்டு சங்கங்கள் பதிவு விதிகளையும் மீறி விக்டோரியா எட்வர்ட் மன்றம் செயல்படுவது தெரிய வந்துள்ளது.

எனவே இச்சங்கத்தை நிர்வகிக்கவும், சங்கத்திற்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாக குழுவை தேர்வு செய்யும் விதமாகவும் தற்போதைய நிர்வாகக்குழு கலைக்கப்பட்டு, மதுரை வடக்கு மாவட்ட பதிவாளர் ரவீந்திரநாத் மார்ச் 1 முதல் தனி அலுவலராக இருப்பார். அவரை ஓராண்டு காலத்திற்கு இப்பதவியில் ஆளுநர் நியமித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

இதன்படி பொறுப்பேற்க ரவீந்திரநாத் நேற்று மன்ற அலுவலகத்திற்கு வந்தபோது பூட்டு போடப்பட்டிருந்தது. இவ்விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் நேற்று மாலை வரை விசாரணை நடந்தது. ஆனால் எழுத்துப்பூர்வமாக எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாத நிலையில் மீண்டும் மன்றத்தை ஆக்கிரமித்து செயல்படுகிறார் என மன்ற நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: வைச்சான் பாரு ஆப்பு! குடிபோதையில் மாணவர்கள் அட்ராசிட்டி! முன்ஜாமீன் வழங்க நீதிபதி வைத்த ட்விஸ்ட்!

Last Updated : Mar 5, 2023, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.