சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரையில் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’31ஆவது சாலை பாதுகாப்பு வாரவிழா தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றுவருகிறது. போக்குவரத்து விதிகளை எல்லோரும் கடைபிடிக்கவேண்டும். சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் என் குடும்பமும் ஒன்று’ என்றார்.
இதையும் படிங்க: அரியலூரில் சாலை பாதுகாப்பு வார விழா பேரணி நடைப்பெற்றது..