ETV Bharat / state

மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளின்றி கரோனா தடுப்பூசியா? - பாஜகவின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு: சு.வெங்கடேசன் - தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

மதுரை: சரியான முறையில் மூன்றாம் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளாமலேயே அனுமானத்தின் அடிப்படையில் கரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது சிறுபிள்ளைத்தனமானது என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிக்கு அனுமதி பிஜேபியின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு சு.வெங்கடேசன்

author img

By

Published : Jan 4, 2021, 7:37 PM IST

இதுதொடர்பாக அவர் இன்று (ஜன.3) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தடுப்பூசி அவசரமானது அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சரியான மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளின்றி அனுமானத்தின் அடிப்படையில் கோவாக்சினுக்கு அனுமதி அளித்திருப்பது, இந்திய ஆய்வுக்கட்டமைப்பின் நம்பிக்கையையே சிதைப்பதாக உள்ளது. ஒரு தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து தெளிவான உலக ஆய்வு வரையறை உள்ளது.

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்

இந்த அனுமதியும் அங்கீகாரமும் அந்த வரையறையின்படி அமையவில்லை. எந்த ஆய்வுச்சட்டத்தின் வழிகாட்டுதலில் மத்திய அரசு அனுமதித்துள்ளது? என்ற விவரமும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை அரைகுறை ஆய்வுகளோடு வெளிவரும் கோவாக்சின் ஏதேனும் பெரும் பிரச்னையைக் கிளப்பினால் அது கோவாக்சின் தோல்வியாக மட்டும் முடியாது.

தடுப்பூசிக்கு அனுமதி பிஜேபியின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு சு.வெங்கடேசன்
தடுப்பூசிக்கு அனுமதி பிஜேபியின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு சு.வெங்கடேசன்
ஒட்டுமொத்தமாக வாக்சின்கள் மீதான நம்பிக்கையையே சிதைத்துவிடும். வெகுமக்கள் தடுப்பூசிகளையே புறக்கணிக்கத் தொடங்கினால் அதன் விளைவு கொடிதினும் கொடிது. தவறான வாக்சின் அந்த வைரஸை பலம் பொருந்திய வீரியமானதாக மாற்றிவிடக்கூடாது. கூடவே, இப்போதைய புதிய வீரிய வைரசுக்கும் இத்தடுப்பூசி பயன்படும்; 110 சதவீத பாதுகாப்பு என்றெல்லாம் கூச்சலிடுவது இந்திய அறிவியல் உலகையே எள்ளி நகையாடச் செய்கின்றது.
இந்திய தயாரிப்பு சித்தாந்தங்களை தன் அரசியல் ஆயுதமாக எடுக்கும் பிஜேபியின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு - சு.வெங்கடேசன்

தற்சார்பு, இந்திய தயாரிப்பு சித்தாந்தங்களை தன் அரசியல் ஆயுதமாக எடுக்கும் பாஜகவின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்புபோலத்தான் இந்த அவசரகதி அங்கீகாரம் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

முன்னதாக, அவசர கால நோக்கில் கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு தர அமைப்பு நேற்று (ஜன.3) அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் வி.ஜி. சோமானி, “கரோனா வைரஸுக்கான இரண்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட்டும், பாரத் பயோடெக்கின் கோவாக்சினும் அவசர கால நோக்கில் கரோனா வைரஸுக்கு எதிராக போடப்படவுள்ளது. முன்னதாக, இந்த இரு அமைப்புகளும் தங்களின் சோதனை, மாதிரி தரவுகளை சமர்ப்பித்தன” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கரோனா சிகிச்சையில் கபசுரக் குடிநீர் நம்பிக்கையூட்டுகிறது'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.