ETV Bharat / state

ட்ரம்ப் வருகையால் நாட்டிற்கு எந்தப் பயனுமில்லை - காங்கிரஸ்

மதுரை: அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வருகையால் நாட்டிற்கு எந்தப் பலனும் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Feb 25, 2020, 9:43 PM IST

காங்கிரஸ் எம்பி வசந்தகுமார்
காங்கிரஸ் எம்பி வசந்தகுமார்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கூறியதாவது, "காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எடுத்தது கணக்கெடுப்பு மட்டுமே. கணக்கெடுப்பது என்பது வேறு; இந்தியாவில் இருக்கத் தகுதியுடையவன் என்று கணக்கெடுப்பது வேறு. 50 பேர் இருக்கிறார்கள் என்றால் 50 பேர் இருக்கிறார்களா என்று பார்ப்பது வேறு, 50 பேரில் யார் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று கூறுவது வேறு.

70 வருடமாக கட்டுக்கோப்பாக வளர்ந்துகொண்டிருக்கும் இந்தியாவில் புதிதாகச் சட்டத்தைப் போட்டு கணக்கெடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா அதிபர் ட்ரம்பை கோலாகலமாக வரவேற்றது சரி.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்று வேலை பார்ப்பவர்களுக்கு பாதுகாப்புத் தருவேன் என்றோ, இந்திய நாட்டிற்கு அமெரிக்கா என்ன செய்தது என்ன செய்யும் என்றோ ஒரு வார்த்தைகூட ட்ரம்ப் கூறவில்லை. ட்ரம்ப் வந்தது நாட்டிற்கு நல்லதுதான், ஆனால் பலன் இல்லை என்பதுதான் காங்கிரசின் முடிவு.

காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் செய்தியாளர் சந்திப்பு

வெளிநாட்டுத் தலைவர்கள் வருகின்ற வேளையில் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைப்பதுதான் நாகரிகம், அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவிற்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி அழைத்திருக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் பார்க்க: இம்ரான் கானுடன் நல்லுறவு தொடர்கிறது - டொனால்ட் ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.