ETV Bharat / state

அணுமின் நிலைய பணிகளுக்கான தேர்வு மையம் சென்னையில் அமைக்க பரிசீலனை - சு. வெங்கடேசன் எம்பி தகவல்! - சு வெங்கடேசன் எம்பி கடிதம்

மதுரை: சென்னை கல்பாக்கம் அணுமின் நிலைய பணி நியமனத் தேர்வு சென்னையில் அமைக்க பாபா அணுமின் நிலையம் பரிசீலனை செய்வதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார்.

அணுமின் நிலைய பணிகளுக்கான தேர்வு மையம் சென்னையில் அமைக்க பரிசீலனை -சு வெங்கடேசன் எம்பி தகவல்!

author img

By

Published : Mar 2, 2021, 11:50 AM IST

இதுகுறித்து சு. வெங்கடேசன் இன்று (பிப். ) செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாபா அணு மின் நிலையம் சார்பில் பதில் அளித்துள்ள அதன் கண்ட்ரோலர் கே. ஜெயக்குமார் தனது கடிதத்தில், உதவித் தொகையுடனான பயிலுநருக்கான ( பிரிவு 1 & 2) தேர்வுகள் மூன்று கட்டங்களாக - தொடக்க நிலைத் தேர்வு, முன்னேற்ற கட்ட தேர்வு, திறனறித் தேர்வு என நடைபெற வேண்டியுள்ளதால், விண்ணப்ப நிலையில் இருந்து தேர்வுப் பட்டியல் வெளியிடும் வரையிலான பணி மும்பையைத் தலைமையகமாகக் கொண்டே நடத்தப்படுகிறது.

அதுமட்டுமின்றி, விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் ஏராளமாக வரப்பெறுவதாலும் எழுத்துத் தேர்வை ஒன்றிற்கு மேற்பட்ட மையத்தில் நடத்துவதில் சிரமம் இருக்கிறது என்றாலும் விண்ணப்பங்களைத் தொகுக்கும் பணி நிறைவடைந்தவுடன், விண்ணப்ப எண்ணிக்கையைக் கணக்கிற் கொண்டு, சென்னையில் ஓர் மையத்தை அமைக்க வாய்ப்புள்ளதா என்று பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வ்
சு வெங்கடேசன் எம்பி கடிதம்

கோவிட் சூழலில் தொலை தூரங்களில் மையங்கள் அமைக்கப்படுவது தேர்வர்களுக்கு பெரும் இன்னல்களை ஏற்படுத்தும். போட்டியும் சம களத்தைக் கொண்டதாக இருக்காது. ஆகவே பாபா அணு மின் நிலையம் நல்ல முடிவை எடுக்கட்டும். தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வர்களுக்கு நல்ல தேர்வுச் சூழல் அமையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...ஸ்டாலினை எதிர்த்துக் களம்காணும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.