மதுரை: என்ஐடி கல்வி நிறுவனங்களின் அலுவலர் தேர்வுகளில் இந்தி கட்டாயம் என்பதை திரும்ப பெறப்பட்டுள்ளது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமனத் தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் என்னும் அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (National Testing Agency) கடந்த ஆகஸ்ட் 17 அன்று வெளியிட்டது.
ராய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், கோழிக்கோடு, சூரத்கல், ராஞ்சி, ஹமிர்பூர், சில்சார், குருச்சேத்திரா ஆகிய என்ஐடிக்கள், ஜெய்ப்பூரில் உள்ள எம்என்ஐடி ஆகிய நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பப்படுவதற்கான அறிவிக்கையில், இந்தி மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் தேர்வர்களை அதிர்ச்சி அடைய வைத்ததுள்ளது" என தெரிவித்து இருந்தார்.
-
இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி!
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
என்.ஐ.டி உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவன அலுவலர் தேர்வுகளில்
இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்பதை திரும்பப்பெறக் கோரினோம்.
எமது கோரிக்கை ஏற்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தி பேசாத மாநில மாணவர்கள் கொண்டாட வேண்டிய வெற்றி! pic.twitter.com/NA4l7kdu13
">இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி!
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 30, 2023
என்.ஐ.டி உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவன அலுவலர் தேர்வுகளில்
இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்பதை திரும்பப்பெறக் கோரினோம்.
எமது கோரிக்கை ஏற்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தி பேசாத மாநில மாணவர்கள் கொண்டாட வேண்டிய வெற்றி! pic.twitter.com/NA4l7kdu13இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி!
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 30, 2023
என்.ஐ.டி உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவன அலுவலர் தேர்வுகளில்
இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்பதை திரும்பப்பெறக் கோரினோம்.
எமது கோரிக்கை ஏற்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தி பேசாத மாநில மாணவர்கள் கொண்டாட வேண்டிய வெற்றி! pic.twitter.com/NA4l7kdu13
அதில் இந்தி மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் மதிப்பெண்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழித் தேர்வுகளுக்கு தரப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி என மதிப்பெண் விபரம் பிரித்து தரப்படாததைக் குறிப்பிட்டு, இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும், இத்தகைய அறிவிப்பு இந்தி பேசாத மாணவர்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடியது என்றும், இந்தி மொழி திணிப்பை கைவிட வேண்டுமென்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு ஆகஸ்ட் 23 அன்று கடிதம் எழுதி இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த கடிதத்திற்கு தீர்வு கிடைத்துள்ளதாக தேர்வு பற்றிய புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதை குறிப்பிட்டு இருந்தார். அதில் இந்தி மொழி கட்டாயம் இல்லை என்றும், ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதிக் கொள்ளலாம் என்று மாற்றப்பட்டு உள்ளதை பழைய அறிவிப்பு புதிய அறிவிப்பு என குறிப்பிட்டு படங்களை பதிவிட்டு விளக்கி இருந்தார்.
இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தி பேசாத அனைத்து மாநில மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றி என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "பரனூர் டோல்கேட் இனி பா.ஜ.க மாடல் டோல்கேட்" - விளாசிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன்!