சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ''மனுதர்மத்தை பாஜக ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். நேரடியாக மக்களைப் பார்த்து மனு தர்மத்தை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை விளக்கிக் கூற வேண்டும். இந்திய சாசனத்தைவிட மனுதர்மம் உயர்ந்ததா என்பதை முதலில் பாஜக தெரிவிக்க வேண்டும்.
திருமாவளவன் பேசியதைத் தெளிவாகப் பார்க்க வேண்டும். அதற்கு முதலாக அவருடைய நிலைப்பாட்டைத் தெரிந்திருக்க வேண்டும். அதன் பின்புதான் விமர்சிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் ஆளுநர் மிக விசித்திரமானவர். எதற்கெல்லாம் ஒப்புதல் வழங்க வேண்டுமோ அதற்கெல்லாம் ஒப்புதல் வழங்குவதில்லை. எதற்கு ஒப்புதல் வழங்கக் கூடாதோ அதற்கு ஒப்புதல் வழங்கிவருகிறார்.
கிராமப்புறங்களில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஒதுக்கீடு விருப்பமான ஒன்றாக உள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்வது என்னைப் பொறுத்தவரை நியாயமானது.
வருகின்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெற்றோமோ அதேபோல் இதிலும் வெற்றி காண்போம்'' என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக குறைவு!