மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள காளிகாப்பான் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா. இவரது மகன் அஜித்குமார் (21) பணம் கேட்டு அடிக்கடி தனது தாயை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம்போல அஜித்குமார் தனது தாயிடம் பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார்.
இதனால் கடும் கோபமுற்ற சரோஜா, தனது மகன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிப் பற்றவைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த அஜித்குமார், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, சரோஜாவை கைது செய்த ஒத்தக்கடை காவல் நிலையத்தினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.