ETV Bharat / state

குடிகார மகனால் வேதனை - தாய், தந்தை கோயிலில் தற்கொலை - மகனின் துயரங்களைத் தாங்க முடியாமல் தாய் தந்தையர் விஷம் அருந்தி தற்கொலை

மது பழக்கத்தின் காரணமாக பல்வேறு தவறான செயல்பாடுகளால் துன்புறுத்திய மகனின் துயரங்களை தாங்க முடியாமல் தாய், தந்தை கோயிலில் தற்கொலை செய்து கொண்டனர்.

மகனின் துயரங்களைத் தாங்க முடியாமல் தாய் தந்தையர் கோயிலில் தற்கொலை  mother father suicide in temple because of son behavior

author img

By

Published : May 19, 2022, 10:10 AM IST

மதுரை அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த கந்தசாமி (62) - ராஜேஸ்வரி(60) தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். மற்றொரு மகனான அழகர்சாமி (எ) குணா என்பவர் பெத்தானியாபுரத்தில் தனியே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அழகர்சாமி மதுப்பழக்கத்திற்கு ஆளாகி பொறுப்பற்ற முறையில் இருப்பதாகக் கந்தசாமியும், ராஜேஸ்வரியும் பலமுறை கண்டித்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் மன வேதனை அடைந்த தம்பதி மதுரை புட்டுத்தோப்பு பகுதியில் உள்ள சிவன் கோயிலில் அமர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்கொலை வேண்டாம்
தற்கொலை வேண்டாம்

தொடர்ந்து நீண்ட நேரமாக அங்கேயே இருந்து பின்னர் மயங்கி விழுந்ததை அடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த இருவரும் நேற்று(மே.18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: KGF பட பாணியில் போலீசாருக்கு மிரட்டல்... கைது செய்த சில மணிநேரத்தில் ஜாமீன்... கதறும் காவல் துறை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.