ETV Bharat / state

8 வயது சிறுமிக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி! - மதுரை தற்கொலை முயற்சி செய்திகள்

மதுரை: எட்டு வயது சிறுமிக்கு விஷம் கொடுத்து தாயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை செய்திகள்  Mother attempts suicide by poisoning 8-year-old girl in Usilampatti  A Women attempts suicide in usilampatti  Madurai Latest Crime News  மதுரை தற்கொலை முயற்சி செய்திகள்  தற்கொலை முயற்சி வழக்குகள்
A Women attempts suicide in usilampatti
author img

By

Published : Nov 25, 2020, 6:58 PM IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி உஷா (வயது 25). இவர்களுக்கு 8 வயதில் மகிமா என்ற பெண் குழந்தை இருந்தது. மோகன்ராஜ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

நவம்பர் 22ஆம் தேதி மோகன்ராஜ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது, வழக்கம் போல் கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த உஷா தனது 8 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அங்கு குழந்தை மகிமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

தற்போது, தாய் உஷா உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தாய் உஷா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அலட்சியம் காட்டிய காவல்துறை - மகனுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.