மதுரை மாவட்டம் அருகே உள்ள சோழவந்தான் பகுதியைச் சேரந்தவர் சதீஷ்குமார். இவர் சோழவந்தான் பேரூராட்சி அருகே உள்ள மார்கெட் சாலையில் செல்ஃபோன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இங்கு செல்ஃபோன் ரீசார்ஜ், செல்ஃபோன் பழுது, புதிய செல்ஃபோன் விற்பனை உள்ளிட்டவை பார்க்கபடுகிறது. சதீஷ்குமார் வழக்கம் போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டு இன்று காலை கடையை திறக்க வந்துள்ளார்.
அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு சட்டர் தூக்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையை திறந்து பார்த்த போது கல்லாவில் இருந்த 80 ஆயிரம் ரொக்கப்பணம், 30 புதிய செல்ஃபோன்கள், செல்ஃபோன் உதிரிபாகங்கள் என ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக சோழவந்தான் காவல் நிலையத்திற்கு சதீஷ்குமார் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மோப்ப நாயை வரவழைத்து கடை, கடையின் சுற்றுபுற பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
சதீஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: