மதுரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, குளங்கள் தூர்வாருதல், நீர்நிலைகளை சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் சாலையில் அமைந்துள்ள அயன்பாப்பாக்குடி கண்மாயில் 7 கோடியே 13 லட்சம் செலவில், கண்மாய் வரத்து நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகளை மாவட்ட வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் அமைந்துள்ள அயன்பாப்பாக்குடி வரத்து கால்வாய் 2,000 மீட்டர் நீளத்திற்கு சுத்தப்படுத்தப்படவுள்ளது. இதனால் நேரடியாக 248 ஏக்கர், மறைமுகமாக 2,142 ஏக்கர் நிலங்கள் சுத்தப்படுத்தப்படும். இந்த சீரமைப்பு பணிக்காக 7 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவிடப்பட உள்ளது" என்றார்.
மேலும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதலமைச்சர் மதுரை வருவது குறித்த செய்திளாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "மதுரையில் கரோனா வைரஸ் தொற்று தாக்கம் குறைந்து வருவதை கடந்த இரண்டு தினங்களாக பார்த்து வருகிறோம். தொடர்ந்து அதனை முழுமையாக கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை ஆணையை வழங்கிய எம்எல்ஏ!