மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மொத்த காய்கறி சந்தையில் 25 பேருக்கு ஒரே நாளில் கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் பரவை மொத்த காய்கறி சந்தை ஜூன் மாதம் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரைப் பகுதியில் கரோனா பரவல் அதிகரித்ததால் ஜூலை 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு உத்தரவால் மொத்த காய்கறி சந்தை செயல்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று ( ஜூலை 15) முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் வியாபாரிகள் காய்கறி சந்தையை திறக்க கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மீண்டும் பரவை மொத்த காய்கறி சந்தை திறக்கப்பட்டால் கரோனா நோய்த்தொற்று அதிகரிக்கும் எனவே அதற்கு மாற்று இடம் தேர்வு செய்வது குறித்து வருவாய்த்துறையினர் ஆலோசித்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று( ஜூலை 16) பெருங்குடி பகுதியையும் தோப்பு துணைக்கோள் நகரம் பகுதியையும் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வினய், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
தோப்பூர் துணைக்கோள் நகரத்தில் அமைச்சர் ஆய்வு! - மதுரை செய்திகள்
மதுரை: பரவை மொத்த காய்கறி சந்தை கரோனா காரணமாக மூடப்பட்டதை அடுத்து தோப்பூர் துணைக்கோள் நகரத்தில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.