ETV Bharat / state

மூத்த தமிழறிஞர் இளங்குமரனாருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அஞ்சலி - pays tribute to ilangumaranar

முதுபெரும் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவுக்கு தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாநில அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தினார்.

minister thangam thennarasu
அமைச்சர் தங்கம் தென்னரசு
author img

By

Published : Jul 26, 2021, 8:06 PM IST

மதுரை: திருநகரைச் சோ்ந்த தமிழ் அறிஞர் புலவர் இரா. இளங்குமரனாா் (94), அவரது இல்லத்தில் நேற்று (ஜூலை25) இரவு காலமானார். திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்த இவர், திருநகர் அரசு பள்ளியில் 1946 ஏப்.8இல் தமிழ் ஆசிரியராக தமது தமிழ் பணியை தொடங்கினார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் 1951ஆம் ஆண்டு புலவர் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். நூலாசிரியா், பதிப்பாசிரியா், தொகுப்பாசிரியா், இதழாசிரியா் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளார். மதுரை அங்கையற்கண்ணி ஆலயத்தில் 1958இல் குண்டலகேசி எனும் நூலை வெளியிட்டார்.

தமிழுக்கு ஆற்றிய தொண்டு

இவரின் திருக்குறள் கட்டுரை தொகுப்பு எனும் நூலை 1963இல் முன்னாள் பிரதமர் நேரு வெளியிட்டார். சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு எனும் நூலை 2003இல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெளியிட்டார். எங்கும் பொழியும் இன்பத்தமிழ் , குண்டலகேசி, திருக்குறள் தமிழ் மரபு என்பது உள்ளிட்ட 500க்கும் மேல்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

இவர் திருச்சியை அடுத்த அல்லூர் பகுதியில் திருவள்ளுவர் தவச்சாலை எனும் தமிழ் ஆராய்ச்சி கூடம் நடத்தி வந்தார். தமிழ்நாடெங்கும் பல்வேறு கல்லூரிகள் மற்றும் தமிழ் மொழி குறித்த கருத்தரங்குகளில் திருக்குறள் குறித்து சிறப்புரையாற்றியுள்ளார். இவரது தலைமையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் வழி திருமணங்களும் நடந்துள்ளன.

விருதுகள்

இவரது தமிழ் சேவையை பாராட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழ் செம்மல் விருதும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதுமுனைவா் பட்டமும் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் திரு.வி.க விருது வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு இ.இளங்கோ மற்றும் பாரதி என்ற இரு மகன்களும், கலைமணி, திலகவதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

முதுபெரும் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் ஆகியோர் நேரடியாக வந்து அவரது பூதவுடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “இளங்குமரனாரின் இறப்பு தமிழ்நாட்டின் பேரிழப்பாகும். அவரது இறப்பினால் மிகுந்த வருத்தம் அடைந்த முதலமைச்சர் சார்பிலும், தமிழ்நாடு அரசு சார்பிலும் இறுதி அஞ்சலி செலுத்த வந்துள்ளேன். திரு.வி.க, தேவநேய பாவாணர், மறைமலை அடிகளார் ஆகியோரது மரபு வழியில் தமிழ் வளர்த்த சான்றோர்.

சமுதாய மறுமலர்ச்சிக்கு இளங்குமரனாரின் தொண்டு

திருவள்ளுவர் வழியில் திருக்குறளை ஏற்று தமிழ்நாட்டில் அவர் நடத்திய தமிழ் வழி திருமணங்கள் 5,000க்கும் மேற்பட்டவை. அவை சமுதாய மறுமலர்ச்சிக்கு ஏற்படுத்திய தொண்டு ஆகும். தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த பெருந்தகை அவர் அவரது இழப்பு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது” என்றார்.

மூத்த தமிழறிஞர் இளங்குமரனாருக்கு அஞ்சலி

இளங்குமரனாரின் நூல்கள் அரசுடமையாக்கப்படுமா என்ற கேள்விக்கு, “கலைஞரின் காலத்தில் இருந்து தமிழ் வளர்த்த சான்றோர்களின் பல நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டிருக்கின்றன. அந்த வழியில் இந்த கோரிக்கையையும் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கலந்தாலோசித்து நல்லதொரு முடிவு எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்..

இதையும் படிங்க: மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.