'முதலமைச்சரின் நடவடிக்கைகளுக்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருக்கிறார்' - madurai district recent news
சென்னை: முதலமைச்சரின் நடவடிக்கைகளுக்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருக்கிறார் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை கீழ ஆவணி மூல வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் குன்னத்தூர் சத்திரம் புனரமைப்புப் பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்து பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 977 கோடி ரூபாய் மதிப்பில் 8 ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மதுரையில் நடைபெறுகின்றன. சுற்றுலாத் துறையை மேம்படுத்த கடந்த 9 ஆண்டுகளில் 3,490 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்.
அக்டோபர் 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்களை சென்னைக்கு வரச்சொல்லி எனக்கு எந்தத் தகவலும் இல்லை. தேர்தல் காலம் என்பதால் அதிமுகவை திமுக தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறது.
ஆளுங்கட்சிக்கு எதிராக திமுக பொய் பரப்புரையை மேற்கொள்ளாமல் இருக்கலாம். அதிமுகவிற்கு கெட்ட பெயர் கொண்டுவர வேண்டும் என திமுக செயல்படுகிறது. குழம்பிய குட்டையில் திமுக மீன் பிடிக்க நினைக்கிறது. முதலமைச்சரின் நடவடிக்கைக்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருந்து வருகிறார்" என்றார்.
இதையும் படிங்க: அம்மா நகரும் நியாயவிலைக் கடை: அமைச்சர்கள் தொடங்கிவைப்பு