ETV Bharat / state

மக்களின் தேவையை பூர்த்தி செய்வேதே அரசின் நோக்கம்: அமைச்சர் செல்லூர் ராஜூ - அமைச்சர் ெசெல்லூர் ராஜீ

மதுரையில் ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதே தமிழ்நாடு அரசின் நோக்கம் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

Minister sellur Raju
Sellur Raju
author img

By

Published : Jun 1, 2020, 4:07 PM IST

மதுரை மாவட்டம் துவரிமான் கிராமத்தில் ரூ.25 .30 லட்சம் செலவில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் துவரிமான் கண்மாய் செல்லும், வரத்து கால்வாய்களை சீரமைத்து புதிய கால்வாய்கள் அமைக்கும் பணியினை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் கீழ்மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த துவரிமான் வரத்து கால்வாய்களின் 3 கிளை கால்வாய்கள் சங்கமிக்கும் இடத்தில் 8,150 மீ தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கால்வாய்கள் கிறிதுமால் நதியுடன் இணைக்கப்படுகின்றன.

மதுரை மாவட்டத்திற்கு ஏறத்தாழ 1,057 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு நீர் நிலைகள் சீரமைக்கப்படவுள்ளன. மாடக்குளம், தென்கரை, கொடிமங்கலம் கண்மாயில் ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை அமைத்து நீரை தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Minister selluer raju
குடிமராமத்து பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர்

மதுரையில் ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதே தமிழ்நாடு அரசின் நோக்கம். கண்மாய்களில் நிலத்தடி நீரை உயர்த்தி தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க தமிழ்நாடு அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

கண்மாய்களில் குடிநீரை தேக்கி மக்கள் மனதில் நீங்காத பெயரை எடுத்தவர் குடிமராமத்து நாயகன் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது அவர் ஆட்சியின் சிறந்த திட்டம்.

ஆறு, குளம், கண்மாய்களில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.