மதுரை காமராசர் பல்கலைக் கழக இயற்பியல் துறை பேராசிரியர் ஆரோக்கியதாஸ் கரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிந்து, பாதிப்பின் தீவிரம் குறித்தும் அறியும் கருவியை உருவாக்கிவருகின்றார். அவருடன் உயிரியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர்கள் அசோக்குமார், வரலட்சுமியும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தக் கருவி ராபிட் கிட் அமைப்பை கொண்டது. அதன்மூலம் ரத்தம், சளி மாதிரிகளை வைத்து கரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிமுடியும்.
இந்த நிலையில் கருவியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு செய்தார். அதன்பின் அவர் அக்கண்டுபிடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல கூடிய அனைத்து உதவிகளையும் செய்வதாக பேராசிரியர்களுக்கு உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: 'சரியாகச் செயல்படும் அரசை வேண்டுமென்றே திமுக குற்றஞ்சாட்டுகிறது' - அமைச்சர் கே.சி. வீரமணி