ETV Bharat / state

பிரசாந்த் கிஷோரால் திமுகவுக்கு பயனில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை: பிரசாந்த் கிஷோரால் திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தர முடியாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி
author img

By

Published : Feb 6, 2020, 12:33 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூரில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதை நிகழ்ச்சியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அவர், " சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்காக பிரசாந்த் கிஷோரை நாடியிருப்பது திமுகவின் தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு சமம். இந்தியாவில் பல தலைவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் வெற்றி தேடித்தந்தாலும் தமிழ்நாட்டில் அவரால் வெற்றியைத் தேடித்தர முடியாது" என உறுதிப்படத் தெரிவித்தார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

மேலும், 2021ஆம் ஆண்டு அதிமுகவுக்கே ஒன்றரை கோடி தொண்டர்கள் வாக்களிப்பார்கள் என்று கூறிய அமைச்சர், அதிவேகத்துடன் கூடிய இணையதள வசதிகளை ஊராட்சிகளில் அரசு கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சுமார் 7ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது' - அமைச்சர் செல்லூர் ராஜூ

Intro:*தேர்தல் வெற்றிக்காக பிரசாந்த் கிஷோர் நியமிப்பது திமுகவின் தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு சமம் ,இந்தியாவில் வெற்றி தேடித்தந்தாலும் தமிழகத்தில் பிரசாந்த் கிஷோர் வெற்றியைத் தேடித்தர முடியாது - திருமங்கலத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி* Body:*தேர்தல் வெற்றிக்காக பிரசாந்த் கிஷோர் நியமிப்பது திமுகவின் தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு சமம் ,இந்தியாவில் வெற்றி தேடித்தந்தாலும் தமிழகத்தில் பிரசாந்த் கிஷோர் வெற்றியைத் தேடித்தர முடியாது - திருமங்கலத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி*

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூரில் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் விழாவையொட்டி அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பங்கேற்று அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக தேர்தலில் வெற்றிபெற பிரசாந்த் கிஷோரை நாடி இருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு மக்களுடைய உணர்வுகளை மக்களுடைய எண்ணங்களை மக்களுடைய எதிர்பார்ப்புகளை உணர்ந்துகொள்வதுஅந்த நிலையை திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறது அதை பிரசாந்த் கிஷோர் தேடித் தருவார் என்ற நம்பிக்கையிலே அவர்கள் இப்போது இவர்களால் தேடி கண்டுபிடிக்க முடியாததால் மக்களின் எண்ணங்கள் உணர்வுகள் எதிர்பார்ப்புகள் அதை பிரசாந்த் கிஷோர் தேடிக் கண்டுபிடித்து தருவார் என்று அவரை நியமித்து இருக்கிறார்கள் அவர் இந்தியாவில் எங்கே தேடினாலும் தமிழ்நாட்டிலே அவரால் தேட முடியாது இந்த மக்கள் உணர்வு மிக்க மக்கள் இந்த மக்கள் எல்லோரும் ஒருமித்து எண்ணங்களையே பிரதிபலிக்க கூடியவர்கள் ஆகவே இதுபோன்ற கன்சல்டன்ஸி இதுபோன்ற மனநிலை அறிவதற்காக ஒருத்தரை நியமனம் செய்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கட்சியின் தற்போதே தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு சமம். 2021 ஜெயலலிதாவின் லட்சியக் கனவான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை முதல்வர் எடப்பாடி,துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் அயராத உழைப்பில் ஒன்றரை கோடி தொண்டர்களின் அயராத உழைப்பால் மீண்டும் மக்கள் மகத்தான தீர்ப்பை அதிமுகவிற்கு ஆதரவாக தருவார்கள் அம்மாவின் ஆட்சி மீண்டும் அமையும் முதல்வர் எடப்பாடி யாரும் துணை முதல்வர் ஓ பி எஸ் ம் அன்னை தமிழகத்தை பார் போற்ற வழிநடத்தி எப்படி எடப்பாடி யார் அவர்கள் தமிழகத்தை இந்திய தேசத்தில் முதன்மை மாநிலமாக கொண்டு வந்தார்களோ அதுபோல தமிழகத்தில் பல அற்புதங்களை அதிமுக அரசு உருவாக்கும் படைக்கும் கிராமங்களில் இணையதள வசதி எப்போது தொடங்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு இணையதள வசதி நாடு முழுவதும் தற்போது உண்டு. அதிகவேகத்துடன் கூடிய இணையதள வசதி களை அரசு ஊராட்சிகளில் கொண்டுவர உள்ளது. இது போன்று மாநகராட்சி,நகராட்சி பேரூராட்சி ஊராட்சிகள் ஆகிய பகுதிகளுக்கு கண்ணாடி இழை கேபிள் மூலம் மத்திய அரசின் பாரத் இணையதிட்டமும் மாநில அரசின் தமிழ் இணைய திட்டமும் இணைந்து இணையதள சேவையை மக்களுக்கு வழங்கும் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.